சஜித்தின் ஆட்சியின்போது காலி முகத்திடலில் சூரியன் உதிக்கும்

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாச நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகினால், காலிமுகத்திடலில் சூரியன் உதிக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவி்த்துள்ளார்.

காலிமுகத் திடத்தில் நேற்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்சவினர் சிறையில் இருக்க வேண்டியவர்கள். சிறையில் இருக்கும் படையினர் அவர்களின் தேவைக்காக லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன், பிரகீத் எக்னேலிகொட போன்றவர்களை கொலை செய்யவில்லை.

சிறையில் இருக்கும் படையினர் 11 மாணவர்களை கப்பம் பெற கடத்திச் சென்று கப்பம் பெற்று விட்டு கொலை செய்யவில்லை. அவர்கள் இவற்றை யாருக்காக செய்தனர். அதற்கு காரணமான கோத்தபாய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்தால் என்ன நடக்கும். மீண்டும் அதே நிலைமை ஏற்படும்.

தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எவரையும் தாக்கவில்லை. அரசாங்கத்தை விமர்சித்தாலும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.