ரத்துசெய்யப்பட்டுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட இருந்தவரின் நியமனத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்தே இந்த ரத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்புக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சாஹிட் ஹஸ்மட்டுக்கு பதிலாக மேஜர் ஜெனரல் சாட் கட்டாக் என்பவரை நியமிக்க பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்தது.

எனினும், பாதுகாப்பு அமைச்சர் பேவஸ் கட்டாக் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

உரிய நியமங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த பதவி நியமனத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் எதிராக குரல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.