புதிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதி அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை தொகுதி அமைப்பாளராக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் அதற்கான நியமனத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும் அங்கு இருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பரணவித்தான பிரதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.