ஜனநாயகம் பற்றி பேச அரசாங்கத்திற்கு உரிமையில்லையாம் : மகிந்த கூறுகிறார்

Report Print Steephen Steephen in அரசியல்
48Shares

தேர்தல்களை ஒத்திவைத்த அரசாங்கத்திற்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் வில்கொட பிரதேசத்தில் செயதியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச வில்கொட பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எமது வாக்குகளை பிரிக்கவே 35 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளனர். எனினும் அது நடக்காது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் எமக்கு சேறுபூசுவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

2015 ஆம் ஆண்டு கூறிய கதைகளை தற்போதும் கூறுகின்றனர். எனினும் 4 ஆண்டுகள் அவர்கள் செய்தவற்றை கூறவில்லை. மத்திய வங்கியின் கொள்ளை பற்றியும் பேசவில்லை.

நீதிபதிகள் நீக்கப்பட்ட விதத்தை கூறவில்லை. சில் துணி விநியோகித்தனர் என்று ஜனாதிபதி செயலாளரை சிறையில் அடைத்த அரசாங்கம் இந்த அரசாங்கம்.

காமினி செனரத் செய்த வேலைகளுக்காக தண்டித்தன் எனனும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

உளவியல் தாக்கங்களுக்கு யார் இழப்பீடு செலுத்த முடியும். பழிவாங்குவது அவர்களின் ஒரே பணியாக இருந்த காரணத்தினால், அவர்கள் வேலை செய்ய காலம் இருக்கவில்லை.

அதிவேக நெடுஞ்சாலைகளில் நாங்கள் கொள்ளையடித்ததாக கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 7 மடங்காக அதிகரித்து, வழித்தடங்களை 4 ஆக குறைந்தனர்.

ஆனால், நாங்கள் இலவசமாக உரம் வழங்குவோம். விவசாயிகளின் கடனை இரத்து செய்வோம். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.