தேர்தல் பரப்புரைகளின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

Report Print Ajith Ajith in அரசியல்

தேர்தல் பரப்புரைகளின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து தேர்தல் கண்காணிப்பகமான பெப்ரல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த முறை அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எனவே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வேட்பாளர்கள் அரசியலமைப்புக்கு ஏற்ப நடந்து வன்முறைகளை கைவிடவேண்டும்.

பொலித்தீன் பாவனையை நிறுத்தி சுற்றாடலுக்கு ஏற்ற பரப்புரைகளை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பரப்புரைகளின் போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது.

வன்முறைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

வாக்களிப்பின் போது முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம்.

இன மற்றும் சமயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

அரச சொத்துக்களை வீணடிக்கவேண்டாம்

தேர்தலின் போது அரசியல் கலாசாரத்தை காக்கவேண்டும் என்றும் பெபரல் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers

loading...