தமிழ் மக்களுக்காக தீர்வை கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே வழங்க முடியும்!

Report Print Murali Murali in அரசியல்

இனப்பிரச்சினைக்கான தீர்வை கோத்தபாய ராஜபக்சவினால் மாத்திரமே வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கடந்த நான்கரை வருடங்களாக தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஏமாற்றகரமான நாடகத்தையே அரங்கேற்றிவந்தது.

ஆகவே இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளித்து மாற்றத்தை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியும்” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.