நிசங்க சேனாதிபதியின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

சட்டவிரோத எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவனப்பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது.

ரக்னா லங்கா பணிப்பாளர் பாலித பெர்ணான்டோவுக்கு 35.5 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டே சேனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைப்பெற்று வரும் சேனாதிபதி ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கமுடியும் என்று அவருடைய சட்டத்தரணி மன்றில் அறிவித்தமையை அடுத்தே மன்று இந்த தடைநீக்கத்தை அறிவித்தது.

சட்டரீதியற்ற ஆயுதக்களஞ்சிய குற்றச்சாட்டின்பேரில் சேனாதிபதி கைது செய்யப்படும் நிலையும் உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.