ஈழக்கொடியினை அகற்றிய பின்னரே உரையாற்றினேன்! ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜெனீவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தம்மால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் தமிழ் புலம்பெயர்வாளர்களின் ஆதரவையும் தம்மால் பெறமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்றிருந்த தாம் தமிழ் புலம்பெயர்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றேன்.

இதன்போது ஈழம் கொடி ஏற்றப்பட்டுள்ள அந்த நிகழ்வில் தம்மால் உரையாற்ற முடியாது என்று தாம் கூறியபோது ஏற்பாட்டாளர்கள் தாம் உரையாற்றும்போது அந்தக்கொடியை அகற்றிவிட்டனர்.

இந்தநிலையில் தமிழ் புலப்பெயர்வாளர்களின் மனங்களை மாற்றி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை அகற்றிக்கொள்ளமுடியும்.

இதேவேளை இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வை தம்மால் காணமுடியும்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக உள்ள முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க உட்பட்டவர்கள் வெவ்வேறாக செயற்படாமல் ஒன்றுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Offers

loading...