கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்களை மறுப்பதற்கான காரணம் என்ன? வெளியாகிய புதிய தகவல்

Report Print Kanmani in அரசியல்

ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசினால் தேர்தல் திட்டம் சிதைந்துவிடும் என்பதாலேயே ஊடக சந்திப்புக்களை கோத்தபாய ராஜபக்ச நடத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தி வருவதுடன், செய்தியாளர்களினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றார்.

தான் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்வேன் என்றும், நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறுகின்றார்.

எனவே தான் ஆட்சிக்கு வந்தால் நீதிமன்றத்தின் ஆதிக்கத்தினை முழுமையாக தனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும் என்பதையே இக்கருத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.