சிங்கப்பூரிலிருந்து இன்று நாடு திரும்பினார் கோத்தபாய!

Report Print Rakesh in அரசியல்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

அவர் நாளை சனிக்கிழமை தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்று பொதுஜன முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான இரண்டாவது பரப்புரைக் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு யடியந்தொட நகரிலும் மாலை 3 மணிக்கு தெரணியாகல நகரிலும் மாலை 4 மணிக்கு ஹலியகொட நகரிலும் இடம்பெறவுள்ளது.

பொதுஜன முன்னணியின் மூன்றாவது பரப்புரைக் கூட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கடவத்த பிரதான பஸ் நிலைய மைதானத்தில் இடம்பெறவுள்ளது என அக்கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Latest Offers