ஹிருணிகாவிற்கு பதிலடி கொடுத்த மகிந்த தரப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மத்திய கொழும்பு போன்ற 4 தேர்தல் தொகுதிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்தால் தங்களுக்கு எல்பிடிய போன்ற 100 தொகுதிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

இதற்குப் பதில் கருத்து வழங்கியுள்ள அவர்,

ஐக்கிய தேசிய கட்சி எல்பிடியவில் வரலாற்றில் இல்லாத அளவு படுதோல்வி அடைந்துள்ளதாகவும், இதுவா சஜித் அலையின் தாக்கம்.

மத்திய கொழும்பை போல் சாதகமான தொகுதிகள் அவர்களுக்கு நான்கு இருந்தால் எமக்கு எல்பிடிய போன்ற 100 தொகுதிகள் உள்ளன என்பதை ஹிருனிகாவுக்கு கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.