ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தபாயவுக்கு எதுவும் நடக்கலாம்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, தனது அமெரிக்க குடியுரிமையை இன்னமும் நீக்கிக் கொள்ளவில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.