கோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

மக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங்களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்படும் கொள்கை பிரகடனத்தில் நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் உள்ளடக்குமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை பிரகடனம் தயாரிக்கும் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் போது மஹிந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான மற்றும் கோத்தபாயவின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்ப கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் உள்ளடக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், பதவியை பொறுப்பேற்றதும் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் விடுதலை செய்யப்படுவார்கள் என கோத்தபாய தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய கூற்று நாட்டு மக்கள் மத்தியில் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மஹிந்த கடுமையான உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.