அதிகாரபூர்வ இல்லத்தை நிரந்தரமாகக் கோரும் மைத்திரி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது பயன்படுத்தி வரும் அதிகாரபூர்வ இல்லத்தினை நிரந்தரமாகக் கோரியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதிக்கு அதிகாரபூர்வ இல்லமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இந்த நிலையில் தாம் தற்பொழுது பயன்படுத்தி வரும் அதிகாரபூர்வ இல்லத்தினை ஓய்வு பெற்றதன் பின்னரும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 7, பிஜெட் வீதியில் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ளது.

இந்த இல்லம் ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக பல கோடி ரூபா செலவிட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது 10 ரூபா பெறுமதியான கார்பன் பேனையினால் கையொப்பமிட்ட எளிய மனிதர் தற்பொழுது பாரியளவிலான ஆடம்பரங்களை எதிர்பார்க்கின்றார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.