கோத்தபாய தொடர்பில் வெளிவரவுள்ள மற்றுமொரு முக்கிய தீர்ப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை குறித்த மனுவின் பூரண தீர்ப்பு எதிர்வரும் 15ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

கோதபாய ராஜபக்சவின் குடியுரிமைக்கு சவால் விடுக்கும் வகையில் பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மூன்று நாட்கள் இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

கடந்த 4ம் திகதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 11 நாட்களின் பின்னர் பூரண தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.