சரணடைந்த பலரை ஈவிரக்கமின்றி சுட்டு படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பம்! யாழில் ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கோத்தபாயவே முழு பொறுப்பு என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றைய இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தமிழர்களால் மறக்க முடியாது.

ஆனால், இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் போர் குற்றத்தில் பிரதான குற்றவாளி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய என பலரும் கூறுகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றம் என்பவற்றுக்கு அவரே முழு பொறுப்பு.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த பலரை ஈவிரக்கமின்றி சுட்டு படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

குற்றம் புரிந்த அனைவருக்கும் சர்வதேச விசாரணை ஊடாக தண்டனை கிடைக்க வேண்டும் அதற்காகவே நாம் இன்று வரை போராடி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.