பிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.

Report Print Thileepan Thileepan in அரசியல்

வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமரின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர் போல் செயற்பட்டிருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இரவு வடக்கு ஊடகவியலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமருடன் வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமருடன் நெருக்கமாக அமர்ந்திருந்து அவரது உரையாடலை மொழிபெயர்ப்பு செய்திருந்தார். அத்துடன் இருவரும் ஒன்றாகவே தமது பயணங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி சரணாகதி அடைந்து விட்டதை வெளிப்படுத்துவதாக அங்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.