தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை பார்த்து பதறும் மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் மிகவும் ஆபத்தானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திலுள்ள தொல்பொருளியல் இடங்கள், மஹாவலி கிராமங்களில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஆபத்துக்களுக்கு ஒரு போதும் இணங்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

இனவாத, பிரிவினைவாத நிபந்தனைகளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களே நிராகரிப்பார்கள்.

கூட்டமைப்பின் நிபந்தனைகளை நிராகரிக்கும் நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்கும் வடக்கு அரசியல் கட்சிகள் பல கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு முன் நிற்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபத்து மிக்க யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னிடம் இதுவரையில் முன்வைக்கவில்லை. தான் அறிந்த ஊடகங்களில் வெளியாகியிருந்த 13 விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கருத்து வெளியிட்டதாக மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இதனை தெரிவித்துள்ளார்.