ஞானசார தேரரிற்கு எதிராக வழக்கு தொடுத்தார் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக புதிதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பிக்குவின் உடலை அடக்கம் செய்த விடயத்தில் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தாக்கல் செய்த வழக்கு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உள்ளான அவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.