சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதை ஒப்புக் கொண்ட கோத்தபாய அணியின் முக்கியஸ்தர்! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Report Print Sujitha Sri in அரசியல்

சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதை ஒத்துக் கொண்ட கெஹெலிய ரம்புக்வெல மீது முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மக்களுடனான சந்திப்பில் சஹ்ரானுடைய சகாக்கள் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

என்ற போதும் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக ஒப்புக் கொண்ட கெஹெலிய ரம்புக்வெல மீது யாரும் எவ்வித குற்றச்சாட்டினையும் முன்வைக்கவில்லை.

எனவே நான் அவர் மீது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்ய தீர்மானித்துள்ளேன்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல, சஹ்ரானுக்கு ஏன் ஊதியம் வழங்கினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.