மஹிந்த முகாமிலிருந்து வெளியேறும் பிரபலங்கள்! சஜித்துடன் இணைய நடவடிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரபலங்கள் ஆதரவு வழங்கவுள்ளனர்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த இருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இருவரும் சஜித்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.

அதற்கமைய இந்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் பிரபலங்களில் ஒருவர் அண்மையில் தனக்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பலவற்றில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவர் என குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவுடன் இணையவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.