கோத்தபாயவை கொலை செய்ய முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சிலர் பொய்யான விடயங்களை பிரசாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் 16 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க தினம் அது நாட்டையும் இனத்தையும் காப்பாற்றும் தினம். நாட்டை பிளவுபடுத்தாது, நாட்டை பாதுகாக்க எதிர்வரும் 16 ஆம் திகதி அதிகாலையில் வாக்குச் சாவடிக்கு சென்று கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்.

30 ஆண்டு காலமாக நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். அதற்கு கோத்தபாய ராஜபக்ச பெரிய அர்ப்பணிப்புகளை செய்தார். தற்போது அரசியல் ரீதியாக கோத்தபாயவை கொலை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி நேற்று என்னை தொடர்புக்கொண்டு எமது தொழிலை இராணுவத்திற்கு வழங்க போகிறீர்களா எனக் கேட்டார். அந்த வேலையை இராணுவம் எப்போது செய்தது என நான் கேட்டேன்.

இப்படியான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு ஏமாறாமல், நித்திரை விழிக்கும் ஒருவரை தெரிவு செய்வதை விட நாட்டுக்கு வேலை செய்யும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.