தாய் நாட்டை பிளவுபடுத்த எவருடனும் பேச்சு நடத்த போவதில்லை: சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

ஒன்றாக இருக்கும் தாய் நாட்டை இரண்டாக பிளவுபடுத்துவதற்காக எந்த தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எந்த நிபந்தனைக்காகவும் எமது தாய் நாட்டின் ஆத்ம கௌரவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.

எந்த தரப்பினருக்கும், எந்த கட்சிக்கும் நிபந்தனைகளை முன்வைக்க முடியும். எனினும் அந்த நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அரசியல் இலாபம் பெற நாங்கள் முயற்சிக்க மாட்டோம்.

எம்மால் எண்ணக்கூடிய, எம்மால் உருவாக்கக்கூடிய எமது நாட்டுக்கே உரிய தொலைநோக்கு பார்வை இருக்கின்றது.

அது தான் ஒற்றை தாய் நாடு. இந்த கொள்கையை எவருடனும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த மாட்டோம்.

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல, பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கி, ஏனைய மதங்களை பாதுகாத்து ஐக்கியமாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.