இறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்!

Report Print Murali Murali in அரசியல்

இறுதி யுத்தம் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து அப்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இறுதி யுத்தம் குறித்து அதனை தானே அறிவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மூன்றே வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அப்போது இராணுவத் தளபதியாக கடமைகளை ஏற்றபோது நான் தெரிவித்திருந்தேன்.

எனினும், அதற்கு முன்னரே போரை முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை முழுமையாக ஆக்கிரமிப்பதாக நான் கூறியிருந்தேன்.

எவ்வாறாயினும், திட்டமிட்ட திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவற்றை கைப்பற்றிக்கொள்ள முடிந்ததாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.