பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்த ஜனாதிபதி வேட்பாளர்! நிறைய திட்டங்கள் உள்ளதாக தெரிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்
51Shares

பல சவால்களுக்கு மத்தியில் தாம் நாட்டை பாதுகாத்ததாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய பேச்சுவாரத்தை உள்ளது, உங்களுடனே தவிர அரசியல் கட்சிகளுடன் இல்லை. எனவே நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.

எனக்கு தெரியும் நீங்கள் என்னையும், மகிந்தவையும் நம்பியுள்ளீர்கள் என. நாம் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தோம்.

அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினோம், அபிவிருத்தி செய்தோம். இந்த அரசாங்கம் வந்தவுடன் நாட்டின் அபிவிருத்தி முழுமையாக நின்று போய்விட்டது.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம் எம்மிடமுள்ளது. தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

எமது அரசாங்கம் உலக சந்தையில் தேயிலையின் விலையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையை நாம் நிர்ணயிக்காவிட்டால் எமக்கு தேயிலையை அபிவிருத்தி செய்ய முடியாது.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எம்மிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. நாட்டுக்கு தேவையான சுற்றுலாப் பயணிகளையே இங்கு வரவழைக்க வேண்டும்.

நாங்கள் தோட்ட மக்களை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.