மீள்குடியேறி முஸ்லிம்கள் சென்ற போது கலவரத்தை தூண்ட முயற்சி! வரலாற்றை நினைவுப்படுத்தும் அமைச்சர்

Report Print Mubarak in அரசியல்

முகநூலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக ஒரு கூட்டம் அலைந்து திரிவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் நேற்றிரவு ஓட்டமாவடியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஒரு காலத்தில் வன்னி மாவட்டத்தில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேறி செல்லும் போது அதற்கு எதிரான கோசங்களை எழுப்பி அங்கு இனங்களுக்கு இடையில் கலவரத்தை தூண்டி அதனூடாக குளிர் காய்வதற்கு ஒரு கூட்டம் அரசியல் செய்த வரலாறும் உண்டு என சுட்டிக்காட்டியுள்ளார்.