அமைய வேண்டியது கோத்தபாயவின் அரசாங்கமே! மகிந்தவின் அல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தை உருவாக்குவதே தேசிய சக்திகளின் பிரதான இலக்காக இருக்க வேண்டுமே அன்றி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை உருவாக்கும் இலக்காக அது இருக்கக் கூடாது எனவும் தேசிய சிந்தனை அமைப்பின் தலைவரான சிங்கள தேசியவாதி பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் தவறு நடக்காதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். வரப் போகும் அரசாங்கம் மகிந்த ராஜபக்சவின அரசாங்கமாக இருக்கக் கூடாது.

இது எமது பிரதான இலக்கு. இது கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கமே அன்றி வேறு ஒரு ராஜபக்சவின் அரசாங்கமாக இருக்கக் கூடாது எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக விடயத்தில் கடுமையாக அழுத்தங்களை கொடுத்த நபர்களின் பிரதான நபர் நளின் டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.