கோத்தபாய 27 இலட்சம் மேலதிக வாக்குகளை பெறுவார்! மகிந்தானந்த அளுத்கமகே

Report Print Steephen Steephen in அரசியல்
57Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்துள்ளதால், எதிர்வரும் 16ஆம் திகதி அவர், 27 இலட்சம் மேலதிக வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகுவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி, தொலோஸ்பாகே பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து 37 இலட்சம் வாக்குகளை மட்டுமே பெற முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 1500 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பளத்தை அவரால் எந்த வகையிலும் வழங்க முடியாது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.