புதிய கூட்டணியின் இணை தலைவர்களாக மைத்திரி மற்றும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் உருவாக்கப்பட உள்ள கூட்டணியின் யாப்பு எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது. இதன் போது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் அனைத்து கட்சிகளும் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை பயன்படுத்த இரண்டு தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி நாற்காலி சின்னத்தில் போட்டியிடும்.

அதேவேளை, புதிய கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கும் இணை தலைமைத்துவம் வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கூட்டணியின் இணை தலைவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers