சஜித் பிரேமதாஸவின் பிரச்சார அலுவலகம் மீது தாக்குதல்

Report Print Vethu Vethu in அரசியல்
490Shares

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரச்சார அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்ட, வீரகெட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தின் மீதே தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அலுவலகம் உரிய அனுமதியுடன் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இரவில் அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்திலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என்பது தொடர்பில் இன்னமும் கண்டறியவில்லை என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.