அரசியலமைப்புச் சதித்திட்டமே நெடுஞ்சாலையின் பணிகள் தாமதமடைய காரணம் - கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை அரசாங்கத்தினால் நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளது என ராஜபக்ச அணியினர் சுமத்தும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி அஞ்சல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற தேசிய ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தேசிய ஊழியர் சங்கத்தின் மத்திய மாகாண தொழிற்சங்க சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கிரியெல்ல, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 90 வீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுவதை காண்பிக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் அழைத்துச் சென்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட அரசியலமைப்புச் சதித்திட்டம் காரணமாகவே உரிய நேரத்தில் நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்ய முடியாமல் போனது எனவும் குறிப்பிட்டுள்ளார்.