மொட்டுக்கோ, அன்னப் பறவைக்கோ வாக்களிக்க மாட்டேன்! குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்
42Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது புதிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு வாக்களிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் வாக்கை பயன்படுத்துவேன். நான் எந்த கட்சியிலும் இணையான, தூய்மையான சுதந்திரக் கட்சிக்காரன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையின் கீழ் நான் தலைமைத்துவத்தை ஏற்பேன். மீண்டும் பின்நோக்கி திரும்பிச் செல்ல மாட்டேன். எமக்கு வேறு மாற்று வழி கிடையாது. மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். அன்னப் பறவைச் சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டேன்.

2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்துவதை அன்று எதிர்த்த நான், இன்று அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். ஆனால், எனது வாக்கை நான் அளிப்பேன். யாருக்கு வாக்களிப்பேன் என்று நீங்கள் கேட்க வேண்டாம். நாங்கள் சிறந்த இடதுசாரிகள் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.