கோத்தபாயவுடன் விவாதிக்க சஜித்திற்கு தகுதியில்லை! உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் விவாதம் நடத்த, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

புதிய ஜனநாயக முன்னணியின் தமது வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க அண்மையில் கூறினார்.

இது சம்பந்தமாக நான் தேடிப்பார்த்த போது, சஜித் பிரேமதாச நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருக்கின்றார் என்பது தெரியவந்தது.

இப்படியான நபருடன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச விவாதம் செய்ய முடியாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers