சஜித்தை ஆதரிக்கும் மேர்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வா, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

மாத்தறை திக்குவளையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேர்வின் சில்வா கலந்துக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பாடல் ஒன்றை பாடியவாறு அவர் பிரசார மேடையில் ஏறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மேர்வின் சில்வா, ராஜபக்ச சகோதரர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். பசில் ராஜபக்ச அமைச்சராக கோடி கணக்கில் பணத்தை கொள்ளையிட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச வெள்ளை வான் கலாசாரத்தின் பிதா மகன் எனவும் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியிருந்தார்.

தனக்கு நெருக்கமானவர்களை கோத்தபாய ராஜபக்ச கடத்தியதாகவும் மகிந்த ராஜபக்சவிடம் பேசி அவர்களை மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த போது மேர்வின் சில்வா பல சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததுடன் அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அவரது செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.