நவம்பர் 18 அன்று மகிந்தவுக்கு கிடைக்கும் பிறந்த நாள் பரிசு

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளில் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பிறந்த நாள் பரிசாக நாட்டு மக்கள் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கினிகத்ஹேன, அம்பகமுவை பகுதியில் இன்று பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே சீ.பீ. ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறியேனும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச தெரிவானால், சஜித் கீழ்ப்படியும் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.