திருகோணமலைக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ச

Report Print Abdulsalam Yaseem in அரசியல்
241Shares

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து திருகோணமலையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

திருகோணமலை, உவர்மலை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

இதன்போது கொட்டும் மழையிலும் பொதுமக்கள் வந்திருந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் சில்வா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.