கிளிநொச்சியில் ஐ.தே.கவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரம்

Report Print Mohan Mohan in அரசியல்

கிளிநொச்சியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், கிளிநொச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இரு பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் போட்டி தோன்றுகிற அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சியில் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.