சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும்: ஹக்கீம்

Report Print Mubarak in அரசியல்

கடந்த முறை ஆட்சியை மாற்ற எவ்வாறு ஒன்றிணைந்தமோ அதேபோன்று இம்முறையும் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (26) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் இல்லத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டில் சிறு சில்லறைக் கட்சிகள் கிழக்கில் மக்களை குழப்பி சிறுபான்மையினரின் வாக்குகளை சூறையாடுவதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். இன்று றிஷாத் பதியுத்தினுடைய கட்சிமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் ஜனாதிபதியாக்குவதற்கான முனைப்பிலும் தீவிரமாக உள்ளோம்.

மக்கள் ஒது போதும் இன்னுமொரு குடும்ப ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கிழக்கில் சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து மக்களை தெளிவுபடுத்தி வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்னர் பல கட்சித் தாவல்களும் இருப்பதாகவும், வெற்றி ஜனாதிபதி யார் என்று மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் தெரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.