கோத்தபாய அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவானில் வந்து கடத்திச் செல்வார்கள்! சஜித் எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசியலமைப்பை மீறியவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் வௌ்ளை வானில் வந்து கடத்திக்கொண்டு செல்வார்கள் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பிலிப்பிட்டி – கொலன்ன பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், மிளகு மீள் ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்வது தொடர்பில் உறுதியளிக்கிறேன்.

கொலன்ன தொகுதியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் புதிய தொழிற்துறைகளை ஏற்படுத்தப்படும்.

கொலன்ன தேர்தல் தொகுதியில் 5000-இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப்படும்.

இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி. ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்தது நினைவிருக்கிறதா? சட்டரீதியான அரசாங்கத்தினை சூழ்ச்சி செய்து கைப்பற்றி கார்ட்போர்ட் பிரதமரின் கீழ் திருட்டு அமைச்சரவையை நியமித்தனர். அந்த திருட்டு அமைச்சரவைக்கு 52 நாட்கள் தான் ஆயுட்காலம்.

இவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? அரசியலமைப்பினை மீறியவர்கள் அரச அதிகாரத்தினை பெற்றுக்கொண்டால் இவ்வாறு சுதந்திரமாக கூட்டத்தினை நடத்த முடியாது என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கின்றேன். வேறு வகையில் கூறுவதானால் வௌ்ளை வானில் வந்து கடத்திக்கொண்டு செல்வார்கள் என்றார்.