கல்முனை மாநகர சபையின் புதிய கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபையின் நூலக கட்டட தொகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டுள்ளார்.
கல்முனை மாநகர சபை புதிய கட்டடம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் மற்றும் அதனை ஆரம்பித்தல், பிராந்தியத்தில் நகர திட்டமிடல், அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.