மீண்டும் கொலைக்காரர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமா? ராஜித சேனாரட்ன

Report Print Kamel Kamel in அரசியல்

பத்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ரக்வான பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பலர் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாது என்றே கருதினார்கள்.

சிலர் என்னிடம் தலையை கல்லில் மோதிக் கொண்டதாகத் தெரிவித்தனர். எனினும் அப்போதைய எதிர்க்கட்சியுடன் இணைந்து மஹிந்தவை தோற்கடித்தோம்.

அன்று வெற்றியடைந்த நாம் மீளவும் கொலைகாரர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமா என்பதனை 16ம் திகதி தீர்மானிக்க வேண்டும்.

நாட்டை மீளவும் கள்வர்களிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே எனது நிலைப்பாடு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச பத்து லட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றியீட்டுவார் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.