அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு தடை

Report Print Kamel Kamel in அரசியல்

அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது அனுமதியின்றி சமூக ஊடகங்கள் அல்லது ஊடகங்களின் வாயிலாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த கால தேர்தல்களின் போது தேர்தல் ஆணைக்குழுவினால் முடிவுகள் வெளியிட முன்னதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணும் நிலையத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடாக இவ்வாறு தகவல் கசிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது.

இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதனால் இறுதித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு சில வேளைகளில் 18ம் திகதி ஆகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.