கோத்தபாய காட்டிக் கொடுத்துவிடுவார்! சவேந்திர சில்வா மீது கை வைக்கவிடமாட்டேன்: சஜித் சபதம்

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா மீது கை வைப்பதற்கு எவரும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

தற்போதைய இராணுவத் தளபதியை பணி நீக்க வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா மீது கை வைக்க அனுமதிக்கப்படாது.

நான் ஓர் தூய இலங்கையன், எனக்கு வேறு நாடுகளில் குடியுரிமை கிடையாது. எனக்கு எதிராக போட்டியிடுபவர் இலங்கையின் முழு நேரப் பிரஜையா என்பதில் சந்தேகம் உண்டு.

கோத்தபாய கால்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வைத்திருக்கின்றார்.

கோத்தபாயவிடம் படைவீரர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினால் அவர் படைவீரர்களை காட்டிக் கொடுத்துவிடுவார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.