ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகப்போவதில்லை! மகேஸ் சேனாநாயக்க மறுப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

தாம் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப்போவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் வெளியான தகவலை ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க மறுத்துள்ளார்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்று அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது மகேஸ் சேனாநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று அவரது கட்சித்தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கலாசாரத்துக்காகவே மகேஸ் சேனாநாயக்க போட்டியிடுவதாகவும் அவருடைய கட்சி தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மகேஸ் சேனாநாயக்க தமது வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கலாம் என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் நேற்று குறிப்பிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers