ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றக் கூடியவராக அமைய வேண்டும்! சீ.யோகேஸ்வரன்

Report Print Kumar in அரசியல்

தீபாவளி திருநாளை தொடர்ந்து இந்த நாட்டில் உருவாகும் ஆட்சியாளர் தமிழ் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பினை நிறைவேற்றக் கூடியவராக அமைய இறைவனை பிரார்த்திப்போமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2019 மலரும் தீபத்திருநாள் இந்து தமிழ் மக்கள் வாழ்வில் நல்லொளி பகர எல்லாம் வல்ல இறைவணை பிரார்த்தித்து நல்வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

அத்தோடு பூமா தேவியின் மகனான தீய செயல்களை புரிந்த நரகாசுரனை திருமால் வதம் செய்து அவனது தீமைகள் நீங்கிய இந்நாளை தீபங்கள் ஏற்றி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டுமென நரகாசுரன் திருமாலிடம் வேண்டிக்கொண்டதற்காக இந்துக்களால் இந்நாள் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்படும் புனித பண்டிகையாக கருதப்படுகின்றது.

மேலும் இந்நாளில் கேதார ஈஸ்பரர் விரத இறுதி நாள் வருவதும் புனிதமானதாகவுள்ளது.சகல இந்து மக்களும் தீபாவளி திருநாளில் அதிகாலை நீராடி இறைவழிபாடு மேற்கொண்டு வறியோர்களுக்கும் மற்றும் சகல வழிகளிலும் துன்புற்றோருக்கும் இயன்ற வரை உதவிகளை வழங்கி அந்த மக்களின் துன்பங்களை நீக்க எல்லாம் வல்ல இறைவனை சகலரும் பிரார்த்திப்போம்.

தீபாவளி திருநாளை தொடர்ந்து இந்த நாட்டில் உருவாகும் ஆட்சியாளர் தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பினை நிறைவேற்றக்கூடியவராக அமையவும் இறைவனை வேண்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.