ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 56 முறைப்பாடுகள் பதிவு

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 56 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது.

இதில் 16 முறைப்பாடுகள் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமையுடன் தொடர்புடையவையும், 7 முறைப்பாடுகள் புதிய பதவி நியமனங்கள் தொடர்பானவையுமாகும்.

6 முறைப்பாடுகள் அரச சேவையாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமையுடன் தொடர்புடையவையாகும்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கங்களையும் மின்னஞ்சலையும் ட்ரான்பேரன்ஸி இன்டர்நெசனல் அறிவித்துள்ளது.

தொலைபேசி- 0763223662 அல்லது 0763223442. மின்னஞ்சல் kpd;dQ;ry;- pppr@tisrilanka.org