கட்சியை வலுப்படுத்துவதற்காக முக்கியஸ்தர்கள் இருவர் பிரான்ஸ் பயணம்

Report Print Kanmani in அரசியல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கட்சியை வளர்ப்பதற்காக குறித்த பயணத்தை நேற்று மேற்கொண்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழ் அரசு கட்சி, தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதியை கனடாவிலிருந்தே பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிமித்தம், கனடாவில் தமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றும் குழுவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காகவே சுமந்திரன்- ஆர்னோல்ட் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers