ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொள்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
தவறியேனும் நாட்டு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ தெரிவாகினால், பிரதமராக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படுவார் என சி.பி.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்க சென்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.