யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்
1831Shares

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்றாவது சர்வதேச விமான நிலையம் இன்று நீச்சல் குளமாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. எனினும் இன்று அது நீச்சல் குளமாக மாறியுள்ளது.

நாங்கள் நிர்மாணித்ததை இவர்கள் இன்று திறக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக மக்களுக்கு உரம் வழங்குவோம் என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே கோத்தபாயவுடன் இணையுங்கள். நாங்கள் உங்களை நம்புகின்றோம். நீங்கள் எங்களை நம்புங்கள்.

நாங்கள் இந்த முறை வெற்றி பெறுவோம். எங்கள் வெற்றியின் பங்குத்தாரர்களாகுங்கள் என உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.