கோத்தபாயவை தோற்கடிக்க களமிறங்கியிருக்கும் 200 பேர்

Report Print Ajith Ajith in அரசியல்
869Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சுமார் 200 தொகுதி அமைப்பாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளனர்.

கடந்த வார இறுதியில் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் கூடிய இந்த 200 அமைப்பாளர்களும் பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க இணங்கியுள்ளனர்.

இதில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இல்லாமல் செய்ய பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றம் சுமத்தினார்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின்போது குமார வெல்கமவுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆதாவுத செனவிரட்ன, மில்ரோய் பெர்ணான்டோ மற்றும் ருவன் ரணதுங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.